BREAKING NEWS

தூத்துக்குடியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி முதல் அன்னம்மாள் கல்லூரி வரை புதிய வடிகால் பணிகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய வடிகால் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக காமராஜர் கல்லூரி முன்பு இருந்து அன்னம்மாள் கல்லூரி வரை புதிய வடிகால் பணிகள் ஆரம்பமாக இருப்பதால் அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS