BREAKING NEWS

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும் சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் திரு. எஸ். பிரபாகரன் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

 

இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் வழக்குகள், வழக்கில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தீருதவி தொகை விரைவில் வழங்குதல், கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சாதி மெய்தன்மை சான்று குறித்து விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புவது பற்றியும் சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

 

 

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கொண்டனர்.

 

CATEGORIES
TAGS