தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு.

தூத்துக்குடி காமராஜர் நகர் சேர்ந்த பாலமுருகனின் மகன் சுடலைமணி இவர் தற்பொழுது கால்டுவெல் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார் இந்நிலையில் பாலமுருகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் தனது மகன் சுடலைமணி மதிய உணவு கொண்டு வந்து கொடுப்பதற்காக மருத்துவமனை வந்துள்ளார் கொடுத்துவிட்டு பின்னர் வண்டியை எடுக்கும் பொழுது திடீரென வண்டியில் இருந்து தீ பிடித்த புகை வெளியேறத் தொடங்கியது அருகில் இருந்த கடைக்காரர்கள் தண்ணீர் எடுத்து ஊற்றி சாக்கை போட்டு தீயை அணைத்தனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
CATEGORIES தூத்துக்குடி
TAGS இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்ததுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைதூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்
