BREAKING NEWS

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டி வாழ்த்து.

 

15ம் தேதி சனிக்கிழமை அன்று புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியம்பத்தூர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர் குழுவினரால் நடத்தப்பட்டது.

 

இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து பாராட்டினார்.

 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பளார் பேசுகையில், பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த காமராஜ் கல்லூரி மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.

 

மேலும் சாலைகளில் கவனகுறைவால் நடைபெறும் விபத்துக்களை குறைப்பதற்கும், சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்களை தவிர்ப்பதற்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்,

 

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இதுபோன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் என்று ஊக்கப்படுத்தி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் காமராஜ் கல்லூரி பேராசிரியர்கள் ரமேஷ் கண்ணன், கல்யாணி உட்பட காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS