தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.
தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்தி பெற்றதாகும். ஏழுகடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440ஆம் ஆண்டு பெருவிழா கடந்த ஜூலை 26 ம்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிக்ளில் ஒன்றான திவ்விய நற்கருணை பவனி விழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. காலை 5மணிக்கு முதல் திருப்பலியுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் திருயாத்திரை திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரவு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற திவ்விய நற்கருணை பவனி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனியை முன்னிட்டு பனிமய மாதா தேவாலயத்தின் நற்கருணைப் பேழையானது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இன்னிசை கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
ஆலயவளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த திவ்விய நற்கருணை பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பனிமய மாதா பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் திவ்விய நற்கருணை பேழையானது ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் நற்கருனை ஆசிர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 5ம்தேதி அன்று பனிமய மாதா பேராலய பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
ரருள் பன்னீர்செல்வம் தலைமையில், மாலை திருப்பலியும் ஆயர் இவோன் அம்ப்ரோஸ் மற்றும் ஆயர் அந்தோணிசாமி ஆகியோரின் தலைமையிலான திருப்பலி ஆனது நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நகரவீதிகளில் பனிமய மாதாவின் திருவுருவ பவனியும் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பனிமய மாதா பேராலயத்திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இவ்விழாவினை குறித்து பொது மக்களாகிய சலேசியஸ் கூறுகையில், 6ம் திருநாளான இன்று நற்கருணை நடைபெற்றது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும், திருவிழாவிற்கு வருவர். இத்திருவிழாவில், வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் மட்டுமின்றி, 7கடல் சார்ந்த மக்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொள்வார்கள். என கூறினார். பின்னர், சேவியர் கூறுகையில், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் திருவிழாவில் பங்கு கொள்வர். கொரோனா ஊரடங்கு காரணமாக 2 வருடம் பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது. இந்த வருடம் அனைத்து மக்களும் பங்கேற்றனர். பணிமய மாதா அன்னையின் அருள் அனைவருக்கு கிடைக்கும் என கூறினார்.
மேலும், திருவிழாவை முன்னிட்டு வரும் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.