BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அரசு சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி ஆதவா டிரஸ்ட் நிறுவனர் பாலகுமாரேசன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தலா 3000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார்.

ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தேவசகாயம் வரவேற்றார். விழாவில் மாணவ மாணவியரும், ஆசிரிய ஆசிரியை யரும், பெற்றோரும் கலந்து கொண்டனர். தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அருண்குமாருக்கு ஆதவா டிரஸ்ட் நிறுவனர் பாலகுமரேசன் 3000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியர் ஸ்பெல்மேன் நன்றி கூறினார்.

 

ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் விஜய் ஈசனை ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், தலைமையாசிரியர் அன்னலெட்சுமி உள்பட பலர் பாராட்டினர்.

Share this…

CATEGORIES
TAGS