தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் காயல்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஓட்டுநர்உரிமம் பெறாத மாணவ மாணவியர் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சிறார்கள் ஓட்டும் வாகனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு சாலையில் ஓட அனுமதி இல்லை என்றும், ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டும் சிறார்களுக்கு அவர்களது 25 வயது வரை எந்த வித ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர். டி. ஓ. முனுசாமி, ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்? காயல்பட்டினம் யாசர் டிரைவிங் ஸ்கூல் நிர்வாகி ஜமாலுதீன் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள ஓட்டுநர்களும், பொதுமக்களும், போலீசாரும் கலந்து கொண்டனர்.
