தென்காசியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான இலவச போட்டித் தேர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் முதல் முயற்சியாக மே மாதம் நான்காம் தேதி நீட் தேர்வு எழுத இருக்கின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியில் வைத்து இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியின் முதல்வர் அந்தோணி பால்ராஜ் ஆலோசனையின் பெயரில் பள்ளியின் ஆசிரியர்களால் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவிற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.
யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் அந்தோணி பால்ராஜ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே சிறப்புரை ஆற்றினார். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
அவர்களது மருத்துவ கனவு இப்பயிற்சி வகுப்புகளின் மூலம் நனவாகும் என்று யுஎஸ்பி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் அந்தோணி பால்ராஜ் மாணவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுப்பிரமணியன், குருசாமி நாடார், ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.