தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் லிங்கவளவன், பண்பொழி செல்வம், வசந்தகுமார், ஜான் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பீர் மைதீன், குட்டி வளவன், செய்யது இப்ராகிம், ஜோக்கின், மரிய மைக்கேல், ரவிக்குமார், சோலை முகிலன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்வக்பு வாரிய திருத்தச் சட்டம்விடுதலை சிறுத்தைகள் கட்சி