BREAKING NEWS

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்காசி அருள்மிகு சங்கரா நாராயணசாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

 

தை வெள்ளியை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடைபெற்றது மாலையில் சுவாமி அம்பாள் வெள்ளி சக்கரத்தில் எழுந்தருளி விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

 

 

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது இதனை அடுத்து சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் எழுந்தருளி தேருக்கு வருகை புரிந்தால் அதனைத் தொடர்ந்து தெப்ப தேரோட்டம் நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி மற்றும் அறநிலை துறை இணை ஆணையர் அன்புமணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS