BREAKING NEWS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்

தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இன்று சங்கரன்கோவில் – கழகுமலை சாலையில் ராமநாதபுரம் அருகே தென்காசியில் இருந்து விளத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சித்த நாயக்கன்பட்டியை சேர்ந்த வையணன் மகன் ராதாகிருஷ்ணனிடம் உரிய ஆவணங்களின்றி ரூபாய் 62,300 பணம் இருப்பது சோதனையில் தெரிய வந்தது அப்பணத்தை பறிமுதல் செய்து சங்கரன்கோவில் தேர்தல் நடத்தும் . அதிகாரியிடம் பணம் ஒப்படைத்தனர்

CATEGORIES
TAGS