BREAKING NEWS

தென்காசி வரும் முதல்வர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

தென்காசி வரும் முதல்வர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

தென்காசி மாவட்டத்தின் மைய பகுதியில் மிக முக்கியமான வர்த்தக நகரமாக அமைந்திருப்பது சுரண்டை நகராட்சி ஆகும் சுரண்டையை சுற்றி உள்ள சுமார் 40 ஊராட்சிகளை சேர்ந்த 250க்கும் அதிகமான கிராம மக்கள் தங்களின் மருத்துவம், அரசு அலுவலகங்கள், வங்கி பணிகள், கல்வி, விவசாயம், வர்த்தகம் என சுரண்டையை மையமாக கொண்டு சுரண்டையை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.

தென்காசி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சுரண்டை நகராட்சி முக்கிய பங்கினை வகிக்கிறது.

சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளான சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, திருச்செந்தூர், கொட்டாரக்கரை என சென்று வருவதற்கும் கிராம புற பகுதிகளுக்கு சென்று வருவதற்கும் வசதியாக சுரண்டையில் இருந்தும் சுரண்டை வழியாகவும் கொரோனாவிற்க்கு முன்பு 105 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 23 பேரூந்துகள் செங்கோட்டை 3 புளியங்குடி. 24 சங்கரன்கோவில் 20 திருநெல்வேலி தாமிரபரணி 1 திருநெல்வேலி பைபாஸ் 2 பாபநாசம் 3 மதுரை புதுக்குளம் 2 இதை தவிர திருநெல்வேலி கேடிசி நகர், சேரன்மகாதேவி, திருவைகுண்டம் ஆகிய பணிமனைகளில் இருந்து தினமும் மொத்தம் சுமார் 75க்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன சுரண்டையில் அரசு பஸ் டெப்போ இல்லாத காரணத்தால் சுமார் 30க்கும் அதிகமான பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

இதில் இயக்கப்படும் பேருந்துகள் பழுது ஏற்பட்டால் சுமார் 20 முதல் 50 கிமீ தூரம் உள்ள பணிமனைகளுக்கு சென்று வருவதால் பல நடைகள் கட் ஆவதுடன், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் டீசல் செலவும் ஏற்படுகிறது

மேலும் சுரண்டையில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சுரண்டைக்கு காலை 6 மணி வரையிலும் இரவு 9-30 மணிக்கு பிறகு போதிய பஸ் வசதி இல்லை

அதே போன்று சுரண்டையில் இருந்து நீண்ட தூர பகுதிகளாக இராமேஸ்வரம், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, போடி, மூணார், குமுளி, கோவில்பட்டி, இருக்கன்குடி, தூத்துக்குடி, நாகர்கோவில், கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் கேட்டு பல வருடங்களாக போராடியும் டெப்போ இல்லாததால் இயக்கப்படவில்லை

ஆகவே சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க கோரி கடந்த 40 வருடங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை மாறாக 1989 ஆண்டு சுரண்டையில் டெப்போ அமைக்க பரிசீலிக்கப்பட்டன ஆனால் அந்த டெப்போ சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்டது அதே போன்று 2015ம் ஆண்டு மீண்டும் சுரண்டையில் டெப்போ அமைக்க பரிசீலிக்கப்பட்டு அது சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டது

மேலும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கப்படும் என உறுதி அளிப்பதும் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் அதற்கு உத்திரவாதம் கொடுப்பதும் ஆனால் வெற்றி பெற்ற பின்னர் அந்த வாக்குறுதி காற்றில் பறப்பதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போதைய போக்குவரத்து கழக அமைச்சர் கே.என் நேரு சுரண்டையில் அரசு போக்குவரத்து கழக டெப்போ அமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததும் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராததால் அக் கோரிக்கை நிறைவேற்றபடவில்லை .

2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் கோரிக்கை அடிப்படையில் அப்போதைய அமைச்சர் ராஜ கண்ணப்பன் டெப்போ அமைக்க பரீசீலனை செய்தார்

தொடர்ந்து தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தற்போதைய திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக முதலமைச்சரிடமும்,

போக்குவரத்து துறை அமைச்சரிடமும் தொடர் கோரிக்கை விடுத்து வருவதுடன் சட்டமன்றத்தில் எம்எல்ஏ குரல் எழுப்பியும் தென்காசி தொகுதியின் டாப் 10 கோரிக்கையில் சுரண்டையில் பஸ் டெப்போ அமைக்க வலியுறுத்தியும் இதுவரை அமைக்கப்பட்டவில்லை

சுரண்டையில் டெப்போ அமைக்க சுரண்டை ஆனை குளம் செல்லும் அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு இடம் வசதிகள் உள்ளன, மேலும் தேவையான வசதிகளை செய்து தருவதாக எம்எல்ஏ எஸ்.பழனி நாடார் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலமுறை பரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். எனவே போக்குவரத்து கழகத்தின் நிர்வாக வசதி, வருவாய், டீசல் சிக்கனம், பயணிகளின் நலன், சுரண்டை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தென்காசிக்கு வரும் முதலமைச்சர் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அடிக்கல் நாட்டுவதுடன் உடனடியாக தற்காலிகமாக பஸ் டெப்போவை திறக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இதனால் சுரண்டையில் இருந்து நீண்ட தூர நகரங்களுக்கு பஸ் வசதி கிடைப்பதுடன் கிராமபுற பகுதிகளுக்கு அதிக அளவு பஸ்கள் கிடைக்கும். எரிபொருள் சிக்கனம் ஏற்படுவதுடன் வருவாய் அதிகரிக்கும்

ஆகவே தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையிலும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் துவங்க விருப்பதாலும் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் கலை கதிரவன் ஆகியோர் இதற்கான முழு முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர் சுரண்டை பகுதி மக்களின் 40 வருட கனவை முதலமைச்சர் ஏற்பாரா?

CATEGORIES
TAGS