BREAKING NEWS

தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.

தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை மேற்கொண்டார்

 

இந்த ஆலோசனையின் போது நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன்,

 

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கொலை நடந்து வருவதை தொடர்பாக காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை நடத்தினார் அதனை தடுக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

இதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது.

 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021ஆண்டு 188 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த 2022 ஆண்டு இதுவரை 204 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 958 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீவலப்பேரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த ஆண்டு மட்டும் நெல்லை மாவட்டத்தில் 40 கொலைகள் நடைபெற்று உள்ளது.

 

தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை உடனடியாக ஒழிக்க முடியாது அதற்காக தென் மாவட்டங்களில் முழுமையாக கஞ்சா விற்பனை இல்லை என கூறவில்லை ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் அதிகமாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா வருகிறது.

 

இது தொடர்பாகவும் நாங்கள் நேரடியாக அங்கு சென்று கஞ்சா விற்பவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

கஞ்சா விற்பனை செய்தவர்கள் 2000 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன 15 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 1500 பேர் மீது நன்னடத்தை சான்றிதழ் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )