தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் செயல் விளக்க ஆலோசனை நடைபெறுகிறது என நிறுவனத்தின் இயக்குநர் எம். லோகநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் உள்ள உணவு, தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் சிறுதானிய உணவு அறிவியல்,
தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் செயல்விளக்க முறைகள் தொடர்பாக பொருட்காட்சியும், செயல் விளக்க ஆலோசனைகளும் நடைபெறுகிறது என நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர்எம். லோகநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று லோகநாதன் அளித்த பேட்டியில் இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம்,

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வி.சுப்ரமணியனின் 120 -வது ஆண்டு பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், வரும் 16,17-ம் தேதிகளில் தஞ்சாவூரில் நிறுவன வளாகத்தில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சி நடத்தப்படவுள்ளது.

இப்பொருட்காட்சி 16-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும், 17-ம் தேதி விவசாயிகள், தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள், பொதுமக்களுக்காகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சியானது, “சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள்” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசத்தின் வளர்ச்சிக்கு உணவு பதப்படுத்தும் துறையின் பங்களிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சி இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் இடம் பெறவுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாறியவர்களின் உற்பத்தி பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெறவுள்ளது என்றார்.
