BREAKING NEWS

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.

தமிழக -கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15 வது மலர்கண்காட்சி தேக்கடி குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

 

 

ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெறுகிறது.

 

 

மேலும் வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலர்கண்காட்சி வரும் மே 14 ஆம் தேதி வரை சுமார் 44 நாட்கள் தொடர்ந்து மலர் கண்காட்சி நடைபெறும்.

CATEGORIES
TAGS