தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவாவில் ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது .
இந்த சிலம்பாட்ட போட்டியில் தேனி தீபம் சிலம்ப அறக்கட்டளை சார்பாக 17 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் தனித்திறன் போட்டிகளாக நடைபெற்ற இந்த சிலம்பாட்ட போட்டியில் 11 மாணவ மாணவியர்கள் தங்கப்பதக்கமும் 6 மாணவ மாணவியர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஓவரால் சாம்பியன் பட்டத்தையும் தீபம் சிலம்ப அறக்கட்டளை மாணவர்கள் வென்றனர்.
அதனையடுத்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அரண்மனை புதூர் விளக்கிலிருந்து பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊர்வலமாக அரண்மனை புதூர் விளக்கிலிருந்து அரண்மனைப் புதூர் வரை ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.