BREAKING NEWS

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்த பின்பு தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐந்து முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அது குறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியது….

ஜனார்த்தன இந்து தர்ம கொள்கைகளை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக தேனி மாவட்டத்தில் ஜனாதன இந்து தர்ம மாநாடு ஆனி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

அம்பேத்கர் பிறந்தநாள் அன்று ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு உரிய ஆக்கிரமிப்புகள் உள்ள நிலங்களை இந்து அறநிலையம் சார்பில் மீட்க வேண்டும்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலை தனியாரிடம் ஒப்படைக்காமல் இந்து அறநிலைய துறையே எடுத்து நடத்த வேண்டும்.

திமுகவின் ஆட்சியில் அமைச்சரே திமுக கட்சியை பற்றி அவதூறு ஆடியோவை பரப்பியுள்ளார் இதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் மூலம் நடத்தப்படும் லஞ்சத்தை எதிர்த்து தமிழ் முழுவதும் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஒலி எழுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்பது போன்ற தீர்மானங்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

CATEGORIES
TAGS