தேனியில் கனமழை காரணமாக சாய்ந்த பழமையான மரங்கள்.
போடிநாயக்கனூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சாய்ந்த மரங்கள்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நேற்று இரவு மறு ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள்சாய்ந்தன. போடிநாயக்கனூர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்ற அலுவலகம் அருகில் உள்ள சிட்னி கிரௌண்ட் அருகில் உள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முழுமையாக சாய்ந்தது.
போடிநாயக்கனூர் வ உ சி நகர் ரேஷன் கடையை அருகில் சுமார் 45 ஆண்டுகாலம் பழமையான ஆயிரம் காட்சி மரம் முழுமையாக சாய்ந்தது. இரவு நேரம் என்பதாலும் மழை காரணமாகவும் மக்கள் போக்குவரத்து இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது
CATEGORIES தேனி
TAGS கனமழைகனமழை காரணமாக சாய்ந்த பழமையான மரங்கள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்தேனியில் கனமழைபோடிநாயக்கனூர்முக்கிய செய்திகள்