தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
தேனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக கண்காணித்ததில்
தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (44). இவர் கொடுவிலார்பட்டி ஐஸ்வர்யா நகர் பகுதியில் அவருக்கு சொந்தமான குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களான போதை பாக்குகள் பான் மசாலா போன்றவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த குட்கா பொருட்களை சொக்கத்தேவன்பட்டியைச் சேர்ந்த முத்தீஸ்வரன் (41), குச்சனூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த அருள் ஆகியோர் உதவியுடன் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடித்தனர் .
இதன் அடிப்படையில் குமரேசன் குடோனில் இருந்த ஆறு லட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ எடை உள்ள குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த குமரேசன் மற்றும் முத்தீஸ்வரன் மீது கோட்பா சட்டத்தின் கீழ் பழனிச்செட்டிபட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்பனைக்கு குமரேசனுக்கு உதவியாக இருந்த சரவணன் மற்றும் அருளை போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குமரேசன் முன்பே இருமுறை கோட்பா சட்டத்தின் கீழ் குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.