தேனியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களின் சிறப்புரைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், , பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சதிஸன்.
CATEGORIES தேனி