தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை துவக்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்தார்.
பின்னர் மனித சங்கிலி பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து எடுத்து உரைத்தார்.
தொடர்ந்து மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிறிது நேரம் நடந்து சென்று உரையாற்றினார்.
அப்போது தேனி தேர்தல் வட்டாட்சியர், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.