BREAKING NEWS

தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.‌

 

 

அதன் தொடர்ச்சியாக இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனியில் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன‌.

 

இரண்டாம் நாளான இன்று பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலைப் பிள்ளையார் கோயிலுக்கு இந்து எழுச்சி முன்னணி சார்பாக தேனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டன.

 

 

பின் அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக அல்லிநகரம், பெரியகுளம் சாலை, நேரு சிலை, மதுரை சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று அரன்மணைப்புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலத்திற்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )