தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.

தேனி மாவட்டம்,
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
தேனி அருகே திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பழனிசெட்டிபட்டியில் தனியார் TN.60 மதுபான பார் இயங்கி வருகிறது.
பாரில் மது குடிப்போரால் அப்பகுதியில் பெண்கள் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த TN 60தனியார் மதுபான பார் அகற்றக்கோரி சிவசேனா கட்சி சார்பில் ஏற்கனவே பார் முன்பு மண்டியிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
TN60 மதுபான பார் அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிவசேனா கட்சியினர், அங்கு, கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வது போல் தரையில் உருண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்விற்கும் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.