BREAKING NEWS

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த நாள், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என வள்ளலார் முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

 

 

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வள்ளலார் -200 முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. விழா தொடக்கமாக வள்ளலார் அருள் நெறிமுறைப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது. தேனி கான்வென்ட் பள்ளி அருகே துவங்கிய இப்பேரணியை தேனி துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.‌

 

 

அங்கிருந்து பழைய ஜி‌.ஹெச்.ரோடு, பங்கஜம் ஹவுஸ் தெரு, திட்டச்சாலை, வழியாக பெரியகுளம் சாலையில் சென்று பின் வட்டாட்சியர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

இதில் வள்ளலாரின் அருளுரைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும், பெண்கள் கோலாட்டம் ஆடியவாறும் சுத்த சன்மார்க்கத்தினர் பங்கேற்றனர்.

 

 

பின்னர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், திருவருட்பா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க கருத்தரங்கு, திருவருட்பா தேனமுது, ஆடலமுது உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வருகிறது.

 

 

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை திண்டுக்கல் மண்டல இணை இயக்குநர் பாரதி உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள சமரச சன்மார்க்க அன்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சதிஸன்.

CATEGORIES
TAGS