BREAKING NEWS

தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி தாலுகா, காமராஜபுரத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜுவினாவிடம் மனு அளிக்கப்பட்டது.

 

ஒருங்கிணைந்த மதுரை வேளாண் விற்பனைக்குழு மூலம் 1999-2000ம் ஆண்டு போடி வட்டம், காமராஜபுரம் கிராமத்தில் உலர்களம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டது.

அப்போது களம் கட்டுவதற்கான இடம் காமராஜபுரம் கிராமம் நடராஜன், சர்வே எண் 294/6 ல் கிழக்கு கடைசியில் 20மீ x 20 மீ அளவிற்கு கிரயம் ரூ 10,000/- (ரூபாய் பத்தாயிரம்) என பேசி தொகையை முழுமையாக கிராம மக்கள் செலுத்தி, பத்துரூபாய் பத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பெயருக்கு எழுதி இடத்தை களம் கட்ட விற்பனை துறை அலுவலர்களுக்.கு ஒப்படைக்கப்பட்டது.

 

பஞ்சாயத்து தீர்மான மூலம் உலர் களத்தை பராமரித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது என தீர்மான போட்டு உலர்களத்திற்கு என் வாரிசுகள் பாத்தியம் கொண்டாட மாட்டோம் என நடராஜன் சான்று வழங்கியுள்ளார்.

 

மதுரை வேளாண் விற்பனை குழுவினரால் 1999-2000ம் ஆண்டில் ரூ 2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம்) மதிப்பில் 20மீ x 20 மீ அளவில் கட்டி முடிக்கப்பட்ட உலர்களம் காமராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி ஒப்படைக்கப்பட்டு,

களம் பற்றிய முழு விபரம் பஞ்சாயத்து சொத்துக்கள் பதிவேட்டில் தெளிவாக பதியப்பட்டுள்ளது.

 

கடந்த 22 ஆண்டுகளாக களம் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர்-2022 முதல் களத்திற்கு கதிர்களை கொண்டுவரும் விவசாயிகளிடம் ரூ 200 முதல் 500 வரை வசூல் செய்து கொண்டு கதிர்களை வைக்க அனுமதித்தார்.

நிலம் பத்திர பதிவு துறையில் பதிவு செய்யாததால் EC போட்டால் நடராஜன் பெயருக்கு நில உரிமை வருகிறது.

 

இதனால் களம் கட்டிய இடம் எனக்கு சொந்தம் என உரிமை கொண்டுகிறார். இந்நிலையில் உளர்களத்தின் மேல் தளத்தை இடித்து விட்டார். கடந்த 10 மாதங்களாக பயனற்ற நிலையில் உள்ளது.

 

போடி வட்டார வளர்ச்சி அலுவலர், காமராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர், காமராஜபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதால் களத்தை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஷஜுவனாவிடம் மனு அளிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS