தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
இந்த கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் இணைப்பு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 10,83,98023 ரூபாய் மதிப்பீட்டில் 1024 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கூட்டுறவு கடன் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் வங்கி ஊழியர்களில் சிறந்த கூட்டுறவு கடன் வங்கிகளுக்கும் அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டனர்.
CATEGORIES தேனி