தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் எடப்பாடி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள கொடுவிலார்பட்டியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாராயணசாமி தலைமையிலும் தேனி ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது .இந்த கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஜக்கையன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்., மாவட்ட துணை செயலாளர் சற்குணம், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், பொதுக்குழு உறுப்பினர் டிடி சிவக்குமார், தேனி நகர செயலாளார் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசனாது தற் பொழுது கொண்டுவந்துள்ள சொத்து உயர்வை ரத்து செய்யக் கோரியும், பால் விலை உயர்வினை ரத்து செய்யக் கோரியும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொடுவிலார்பட்டி கிளை செயலாளர் ராஜன் வரவேற்பு உரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சோலை ராஜா கலந்து கொண்டு நன்றி உரையாற்றினார் இதில் எடப்பாடி அணியின் அதிமுக நிர்வாகிகள் பெண்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.