தேனி அருகே தப்புகுண்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அரண்மனை புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேனி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
மக்கள் தொடர்பு முகாமில் பட்டா சிட்டா மாறுதல்,சிறு குறு விவசாய சான்று, குடும்ப அட்டை , ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, மகளிர் குழு மற்றும் மகளிர் உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 351 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 11 லட்சத்து 35 ஆயிரத்து 190 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு துறை சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தப்புகுண்டு கிராமம் மட்டுமின்றி தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.