தேனி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.
ஒவ்வொரு ஆண்டிம் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.
இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் முப்படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படை வீரர் செந்தில்குமாருக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 63,000 முருகனுக்கு 50000, ஆறுமுகம் ரூபாய் 50,000 என பதினோரு பயனாளிகளுக்கு சுமார் 4 நான்கு லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.