தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.
தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி மனித நேயம் காப்பகத்தில் இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி யில் மனித நேயம் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முதியோர்களுக்கு தேவையான அளவு உணவு, சுகாதாரம், இடவசதி போன்ற அடிப்படை வசதிகளை குறித்து முதியவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் காப்பகத்தில் உள்ள சமையல் அறை, கழிவ அறைகளின் தூய்மை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES தேனி