தேனி, கம்பம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பஞ்சாப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பை தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடைய அமைப்பு என்று கூறி மத்திய அரசுக்கு அமைப்பை தடை செய்தது. மேலும் அந்த அமைப்பு சேர்ந்த பலரது வீடுகளில் சோதனை செய்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பில் தொடர்பில் இருந்த
தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் அலி அவரது வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளர் பிரியா தலைமையில் அவரது இல்லத்தில் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை திடீரென சென்னை தேசிய புலனாய்வு முகமை மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.