தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு தலா ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் இரண்டாம் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி கம்மவார் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், தேனி நகர மன்ற தலைவர் ரேணு பிரியா, தேனி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சக்கரவர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் தாமோதரன், மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார், தேனி டிஎஸபி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் முதலாம் ஆண்டு பயிலும் 50 மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான வங்கி அட்டைகளை இன்று தேனி ஆட்சியர், எம்எல்ஏக்கள் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து மாவட்டத்தில் 513 மாணவருக்கு வங்கி அட்டைகள் இன்று வழங்கப்பட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை குறித்து எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கல்லூரி மாணவியருக்கு ஆலோசனைகள் வழங்கி நலத்திட்டங்களை கூறினார்கள்.
நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளானோர் கலந்து கொண்டனர்.