BREAKING NEWS

தேனி கூடலூரில் காளியம்மன் கோவிலில் திருவிழா முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி…

தேனி கூடலூரில் காளியம்மன் கோவிலில் திருவிழா முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி…

தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த வருட பங்குனி உற்சவ திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி நடைபெற்றது.

 

இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் சிட்டு, தட்டான்சிட்டு, என நான்கு பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

 

 

கூடலூர் முதல் லோயர் கேம்ப் வரை எல்லை கொண்டு நடைபெற்ற போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டனர்.

 

 

போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த இரட்டை மாட்டு வண்டிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை ரொக்கப் பரிசுகள் அகப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் ராஜா தலைமையில் விழா குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS