BREAKING NEWS

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியருவி அமைந்துள்ளது.

இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததாலும்,

மேலும் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் வனப்பகுதியில் உள்ள நீரூற்றுகளிலும் ஆற்று பகுதிகளிலும் முற்றிலுமாக தண்ணீர் தண்ணீர் வரத்து இன்றி அருவியில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறையாக வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றது.

 

இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 

சுருளி அருவியில் தண்ணீர் இல்லாததால் வெகு தூரத்தில் இருந்து வந்து ஏமாற்றத்துடன் வந்து திரும்பி செல்வதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும் வரை சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS