தேனி, பொம்மையை கவுண்டன்பட்டி மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.

தேனி பொம்மையை கவுண்டன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி மயான பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகி கட்டணம் பணி நடந்து வருகிறது இந்நிலையில்,

பொது கழிப்பிடம் கட்டினால் தங்களது மயான பகுதியில் எல்லை குறைக்கப்படுவதாக கூறியும் பொதுகழிப்பிடம் அப்பகுதியில் வரக்கூடாது என்றும் பொம்மயகவுண்டன் பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக தேனி அல்லிநகரம் நகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனி பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
