BREAKING NEWS

தேனி போடிநாயக்கனூரில் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலுக்கு திரிசூலம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி.

தேனி போடிநாயக்கனூரில் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலுக்கு திரிசூலம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரமசிவன் மலை திருக்கோவில். பரமசிவனுக்கென்றே தென்னிந்தியாவிலேயே மலை மேல் அமைந்துள்ள ஒரே சிவன் திருக்கோவில் இதுவாகும். இது தென் திருவண்ணாமலை என்றும் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஆகும்.

 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரில் ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு இந்து அறநிலைய துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. கோவிலான இந்த பரமசிவன் மலை திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பல்வேறு விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இரண்டாம் நாள் தொடங்கி ஒரு வாரம் வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த 10 ஆம் தேதி மலைக்கோவிலில் திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டது.

 

இன்று முதல் 7 நாட்கள் திருவிழா தொடங்க இருப்பதால் ஜமீன்தார்களின் பாரம்பரிய முறைப்படி அரண்மனையில் உள்ள நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பரமசிவன் திருவுருவப்படம் அரண்மனை வளாகத்தில் உள்ள ஜமீன்தார்களின் குலதெய்வமான ஜக்கம்மாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர்..

 

பாரம்பரிய முறைப்படி போடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவிலில் பரமசிவன் திருவுருவப் படம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு போடியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ள மலை திருக்கோவிலுக்கு ஊர்வலமாக நடந்தே சென்று மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு பொதுமக்கள் தரிசனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது.

 

ஜமீன்தார்களின் வம்சாவளியைச் சேர்ந்த வடமலை முத்து சீலைய ராஜபாண்டியன் தலைமையில் திருவிழாவைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அரண்மனையில் இருந்து கொண்டு செல்லப்படும் பரமசிவன் திருவுருவப்படம் ஒரு வாரம் மட்டுமே மலைக்கோவிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு மீண்டும் ஏழு நாட்களுக்குப் பின்பு அரண்மனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் வசதிக்காக போடியில் இருந்து அரசு சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS