BREAKING NEWS

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.

 

தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மதியத்தில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் மற்றும் ஓடைகள் நிரம்பக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் நீர்நிலைகள் மற்றும் ஓடையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது.

 

மேலும் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உதாரணத்திற்கு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையோர மற்றும் தெருவோர காய்கறி கடைகள், வடைகடைகள் உள்ளிட்ட சிறு குறு வியாபாரிகள் மிகுந்த பாதிப்புகுள்ளாகினர் . இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

இன்னும் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்ல கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )