தேனி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில்
தேவாரம் மெயின் ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
நேற்று இரவு இப்பகுதியில் உள்ள சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டுகளை உடைத்து பணத்தையும் அதே தெருவில் உள்ள இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 75,000 ரூபாய் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்
அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்க்கையில் சுமார் இரண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடைகளில் உள்ள பூட்டை உடைத்து திருடி சென்றது பதிவாகியிருந்தது சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களையும் மோப்ப நாயையும் வரவழைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
CATEGORIES தேனி
