தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் கம்பம் வா உ.சி. திடல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.
சங்க தலைவர் பொண்காட்சி கண்ணன், சங்க செயலாளர் மகேந்திரன், அவை முன்னவர் சலேத் மற்றும் சங்க பொருளாளர் ராதா,சிதம்பரம் ரவீந்திரன் ,வழக்கறிஞர் ஈசன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கேரள மாநில அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையால்,தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் இருக்கிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள நெய்யாற்றின்கரை, கட்டக்கடை, நெடுமங்காடு ஆகிய மூன்று தாலுகாக்கள்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் தாலுகா
பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோணி தாலுகா. இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம் ஆகிய மூன்று தாலுகாக்கள்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு ஆகிய மூன்று தாலுகாக்கள்.
மலப்பரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் தாலுகா.
வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்ரி, மானந்தவாடி மற்றும் சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்கள் என.
தமிழக எல்லையோரம் உள்ள கேரளாவில் உள்ள 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே 1956 மொழிவழி பிரிவினையின் போது, 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கேரளாவிடம் தமிழகம் இழந்திருக்கும் நிலையில்,இந்த டிஜிட்டல் ரீ சர்வே முறையால், மிகப்பெரிய அளவிலான தமிழக நிலங்களை இழக்கும் அபாயம் இருக்கிறது.
எனவே முறையான வழிமுறைகளை பின்பற்றி, தகுந்த அதிகாரிகள் குழுவை கேரளாவிற்கு அனுப்பி, மேற்கண்ட 15 தாலுகாக்களில், டிஜிட்டல் ரீ சர்வே முறையை நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.