BREAKING NEWS

தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.

தேனி மாவட்டம் கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமது ராஜிக் சென்னையில் ஓட்டல் கடை வைத்துள்ளார்.

இவரது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் ( வயது16) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துத் தேர்வு எழுதி உள்ளார்.

 

விடுமுறைக்காக சொந்த ஊரான கம்பத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சையது சுல்தான் இப்ராஹிம் ஆழமான பகுதிக்கு சென்றார்.

 

நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதுகுறித்து அவருடன் சென்ற நண்பர்கள் கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய சையது சுல்தான் இப்ராஹிம் – ஐ பிணமாக மீட்டனர்.

 

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS