தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பரப் பதாகைகள் போஸ்டர்கள் உள்ளிட்டவைகள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி பொது இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் சுவரொட்டிகள் பிளக்ஸ் பேனர்கள் கட்சி கொடிகள் வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது
அதன்படி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கம்பம் நகரில் உள்ள பகுதிகள் அனைத்திலும் சுவர் விளம்பரங்கள் சுவரொட்டிகள் உள்ளிட்டவை நகராட்சி துறை ஊழியர்கள் கொண்டு அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது
கம்பம் நகரில் உள்ள பயணிகள் நிழல் குடை பாலங்கள் பொது இடங்கள் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் சுவரொட்டிகள் உள்ளிட்டவைகளை நகராட்சி துறை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற செயலில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.