BREAKING NEWS

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.

வயல் வெளியின் மையப் பகுதியில் குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்திருப்பதால் புதிதாக சாலை அமைக்கும் பணி மற்றும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் ஓரம் இராட்சச குழாய்கள் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

மேலும் நகரின் அருகில் இருக்கும் வயல்வெளி பகுதிகளை நகராட்சியின் அனுமதியின்றி வாணிபக் கடைகளாகவும், வீட்டடி மனைகளாகவும் ஒரு சிலர் மாற்றி வருவதால் அந்தப் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் கண்ணாறுகள் பாதிப்படைந்து வயல் வெளிப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்பொழுது விவசாயிகள் நடவுப் பணி தொடங்கி இருக்கும் சூழ்நிலையில் வயல்வெளிக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையிடம் முறையிட்டும் அவர்கள் வந்து ஆய்வு செய்யும் பணியினை மேற்கொண்டு விரைவில் கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து சென்றுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS