தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து பார்க்க மட்டும் அனுமதித்த போதிலும் ஆபத்தை உணராமல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் குழந்தைகளுடன் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், மற்றும் கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் முதல் அவ்வப்பொழுது லேசான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 11 மணி வரை விட்டு விட்டு மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நண்பகல் 1 மணி முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் அருவியின் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த வன காவலர்கள் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததை கண்டு அ&விப்பகுதியில் குளித்த சுற்றுலா பகுதிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்ததோடு அருவியல் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளப்பெருக்கை மட்டும் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர்.
இருந்த போதிலும் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் மிகுதியால் அருவிக்கு மேல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆபத்தை உணராமல் அப்பகுதியில் குளித்துச் செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளது என்பது சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் தொடர்ந்து அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்பொழுது மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் இது போன்று சுற்றுலாப் பயணிகள் அருவிப்பகுதி மற்றும் அருவிக்கு மேல்குளிக்கும் பட்சத்தில் நீரில் அடித்துச் செல்லும் சூழ்நிலை உருவாகும் என்பதோடு உயிர்ப்பலி ஏற்படும் அபாத்தான சூழ்நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.