தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போடியில் முக்கிய பகுதிகளான வள்ளுவர் சிலை யிலிருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் வந்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்,
ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று தனி நபர் நீதிபதி உத்தரவு அளித்ததை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து.
இன்று ஓ.பி.எஸ் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போடியில் முக்கிய பகுதிகளான வள்ளுவர் சிலை யிலிருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் வந்தனர். பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
மாநில விவசாயிகள் சங்க தலைவர் சேது தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் காண்டீபன் செண்பகராஜன் பாஸ்கரன் அப்பாஸ் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடியார் வாழ்க கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க தமிழகத்தின் வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க என்ற கோஷங்களை இட்டனர்.