தேனி மாவட்டம் மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடுசாமி மகன் ராஜேஸ்குமார் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இன்று காலை தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சுப்புராஜ் என்பவரை கண்டிது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராபுரி கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது. இக்கோவில் 11 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது.

இக்கோவிலின் அருகில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் வெள்ளை கண்ணு மகன் சுப்புராஜ் என்பவர் கோவிலுக்கு செல்லும் நடைபாதை பாதையில் இடையூறாக வீடு கட்டி உள்ளார்.
மேலும் அவர் கட்டிய வீட்டை பிற மதத்தினருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்.
ஏற்கனவே பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் நடைபாதை இடையூறாக வீட்டைக் கட்டி இருக்கும் சுப்புராஜ் என்பவரால் மதுராபுரியில் எதிர்காலத்தில் குழப்பம் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற மின் ஊழியர் சுப்புராஜை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கோரிக்கை மனுவை தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பாக மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், நகரச் செயலாளர் முத்துராஜ், மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
