BREAKING NEWS

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி செயலாளர் தர்மர் தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையிலும்,

 

தேனி மதுரை ரோடு மேம்பால பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை துறையினர் மதுரை ரோட்டில் உள்ள 32வது வார்டு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தாங்கள் குடியிருக்க வீடு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும்,

 

 

ஆகவே எங்களுக்கு குடியிருக்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும் வரை தேசிய நெடுஞ்சாலை துறை தங்களை வெளியேற்றும் முயற்சியை நிறுத்திட வேண்டும் என்று கோரி சிபிஎம் கட்சி சார்பாக இன்று பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )