தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் மதிப்பீட்டு குழுவின் தலைவர் பி.ஆர்.பி ராஜா தலைமையிலும் குழுவின் உறுப்பினர்களான பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி,
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தின் துவக்க நிகழ்வினைத் தொடர்ந்து, குழுத் தலைவர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான (சட்டமன்ற உறுப்பினர்கள்) மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளின் போது மரியாதைக்குரிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்ததுகொண்டனர்.