BREAKING NEWS

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

 

இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டில் ஜனவரி 1ஆம் தேதியினை தகுதி நாளாக கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது.

 

 

இதில் ஆண்டிபட்டி, பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் என நான்கு சட்டமன்ற தொகுதியில் 5,42411 பேர் ஆண் வாக்காளர்களும் 5 63 631 பேர் பெண் வாக்காளர்களும் 193 பேர் இதர வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 6 ஆயிரத்து 235 பேர் வாக்காளர் பட்டியல் உள்ளது.

 

 

மேலும் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் பெயர் விடுபட்ட அனைவரும் கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்தம் பெயர் நீக்கம் பெயர் திருத்தம் ஒரே தொகுதிகள் முகவரி மாற்றம் வேறு தொகுதி அல்லது மாவட்டத்திற்கு மாறுதல், மாற்று வாக்காளர் அடையாள அட்டை ஆகிய வற்றிற்கான மனுக்களை வழங்க பொதுமக்களின் வசதிக்காக கடந்த மாதத்தில் 12 13 26 27 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 536 நிர்ணிக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

 

 

இம் முகாமில் 12,238 பெயர் சேர்த்தலுக்கு படிவம் ஆறும், 6,016 பேர் நீக்க படிவம் ஏழும், 5567 பேர் திருத்தம் செய்ய படிவம் எட்டும், என மொத்தம் 23 ஆயிரத்து 821 பேர் மனு வழங்கி உள்ளனர்.

மேலும் நடந்து முடிந்த வாக்காளர் முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகின்ற எட்டாம் தேதி அன்று புதிதாக பெயர் சேர்க்க நீக்கம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தில் தெரிவித்தனர்.

 

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்நல்லூர் சுப்பிரமணியன் பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சியைச் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )