தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து கூடலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் நடவடிக்கை எடுத்த போலீசார் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியே வந்த கேரள மாநில அரசு பஸ்ஸில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகளை தேனி சமதர்ம புரத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் சின்னமனூரை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்
அவர்களிடமிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரத்து 500 லாட்டரி சீட்டுகளையும் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.