தேனி ராஜவாய்காலில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாஜக சார்பில் தேனி நகர தலைவர் மதிவாணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
செய்தியாளர் முத்துராஜ் தேனி
தேனியில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் தேனி நகரமே நீரில் தத்தளித்த நிகழ்வு அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நேற்று பெய்த கனமழையின் காரணமாக,
தேனி நகரமே நீரில் தத்தளித்த நிகழ்வு செய்தி வெளியான நிகழ்வின் பழமையான கொட்டகுடி ஆற்றின் வழியாக தேனிக்கு வரும் ராஜ வாய்க்கால் பகுதியினை பிரபல அரசியல்வாதிகள் பிரமுகர்கள் செல்வேந்தர்கள் ஆக்கிரமிப்பு செய்து ராஜாவாய்க்கால் செல்லும் பாதையினை மறைத்து மிகப்பெரிய அளவில் கட்டடங்களும் சாக்கடைகளை சாலைகளை ஆக்கிரமித்து,
தெருக்கடைகளும் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதை உடனடியாக அகற்றி கழிவு நீர் சாக்கடைகள் மற்றும் மழை நீர்கள் பொதுமக்கள் விவசாயத்திற்கு பயன்படும் நீர்ப்பாசன பிரதான ராஜா வாய்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்திற்கும் பயனுள்ள வகையிலும்,
பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்ற சாலையாக மழைநீர் தேங்காத வண்ணம் சாக்கடைகளில் நீர் செல்லும் வழித்தடம் அமைத்து தரக் கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் தேனி நகர பாஜக தலைவர் மதிவாணன் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.